திருப்பதியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சித்தூர் நெடுஞ்சாலையில் போலீசார் சோதனை செய்த போது ஒரு மினி லாரி உட்பட 3 கார்கள் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றன. அந்த வாகனங்களை துரத்தி சென்ற போது வாகனங்களில் இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில் 2 பேர் பிடிப்பட்டனர்.
லாரியில் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 100 செம்மரக்கட்டைகள், 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.