மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் பூப்பாறையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.பூப்பாறை அருகில் உள்ள கஜானா பாறையில் ஏலத்தோட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். அவர்களின் 15 வயது மகள் தனது ஆண் நண்பருடன் மே 29ல் பூப்பாறைக்கு சென்றார். அங்குள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கிய ஆண் நண்பர் ,அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுமியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
பலாத்காரம்
அப்போது அங்கு வந்த பூப்பாறை அரவிந்த் 22, சாமுவேல் 19, சிவா 19, சுகந்த் 22, 17 வயதுடைய இரு சிறுவர்கள் ஆகியோர் ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு சிறுமியை வலுக்கட்டாயமாக தேயிலைத் தோட்டத்தில் வேறு பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். சாந்தாம்பாறை போலீசார் சிறுமியை மீட்டு இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.இவ்வழக்கு தொடர்பாக இடுக்கி எஸ்.பி., கருப்பசாமி உத்தரவுப்படி மூணாறு டி.எஸ்.பி., மனோஜ், சாந்தாம்பாறை இன்ஸ்பெக்டர் அனில் ஜார்ஜ், எஸ்.ஐ., அனூப்மோன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அரவிந்த், சாமுவேல், இரு சிறுவர்கள் உட்பட நால்வரை நேற்று முன்தினமும், தமிழகத்திற்கு தப்பிச் சென்ற சிவா, சுகந்த் ஆகியோரை நேற்றும் போலீசார் கைது செய்தனர்.
Advertisement