‘வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கு நகர்கிறேன்’ – வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய பூர்ணா

நடிகை பூர்ணா, தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பகிர்ந்து, திருமணம் குறித்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை பூர்ணா, கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘Manju Poloru Penkutty’ என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வந்த அவர், நடிகர் பரத்தின் ஜோடியாக ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து, ‘கொடைக்கானல்’, ‘கந்தக்கோட்டை’, ‘துரோகி’, ‘காப்பான்’, ‘லாக்கப்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

image

இவரது நடிப்பில் உருவான ‘பிசாசு 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஷம்னா கசிம் என்ற தனது இயற்பெயரை திரைத்துறைக்காக பூர்ணா என்று மாற்றிக்கொண்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள நடிகை பூர்ணா, தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டு, ‘தற்போது அதிகாரப்பூர்வமாக குடும்பத்தினருடன் ஆசியுடன், வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்துக்கு நகருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

image

நடிகை பூர்ணாவின் வருங்கால கணவரான ஷானித் ஆசிப் அலி, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஜேபிஎஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்று கூறப்படுகிறது. நண்பர்கள் வழியாக இருவரும் அறிமுகமானலும், இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் நடைபெற்று திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமண தேதி குறிக்கப்பட்டிருந்தாலும் நடிகை பூர்ணா, தற்போது அதுகுறித்து அறிவிப்பு வெளியிடவில்லை. விரைவில் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.