சென்னை: வைகை அணையில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் முதல்போக விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. 45 நாட்களுக்கு 900 கனஅடி வீதம் முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்க வேண்டும் என தெரிவித்தது.