வேலூர் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு, மேலும் 11 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தபடவுள்ளத்தாக அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திற்குள் விமான நிலைய விரிவாக்க பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், விமான ஓடுதளத்திற்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களை அளவிடும் பணிகள் நடைபெற உள்ளதாகவும், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய தொகை வழங்க அனுமதி பெறப்படும் என்றும் கூறினார்.