மும்பை: பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளேன் எனவும் என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி எனவும் கங்குலி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி ராஜினாமா செய்யவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.