இவங்க தான் புது கனவு கன்னி : லாவாண்யாவை கொண்டாடும் ரசிகர்கள்
விஜய் டிவியில் புதிதாக தொடங்கி ஒளிபரப்பாகி வரும் தொடர் 'சிப்பிக்குள் முத்து'. இதில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் லாவண்யா. ராம்ப் வாக் மாடலான இவர் சென்னையில் பல மாடலிங் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். சிப்பிக்குள் முத்து தொடரில் லாவண்யாவின் நடிப்பு பிடித்துப்போன ரசிகர்கள், இவரது இன்ஸ்டாகிராமை தேடி பிடித்து பாலோ செய்து வருகின்றனர். அதில், இவர் மாடலாக இருந்த போது வெளியிட்ட போட்டோக்களை பார்த்து அதை வைரலாக்கி வருகின்றனர். சமீபத்தில் லாவாண்யா தனது கேஷூவலான சில புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட, அதில் அவரது அழகை பார்த்து மயங்கிய நெட்டீசன்கள் இனி இவர் தான் இளைஞர்களின் புதிய கனவு கன்னி என அறிவித்து கமெண்ட் செய்துள்ளனர். லாவண்யாவின் புகைப்படங்களுக்கும் ஹார்ட்டின் மழை பொழிந்து வருகின்றனர்.