தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் ஒன்ராரியோ அரசியல் யாப்பை மீறவில்லை: ஒன்ராரியோ அரசுதரப்பு(Photo)


தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் எந்த வகையிலும் ஒன்ராரியோ அரசியல்
யாப்பை மீறவில்லை என்ற தமது ஆணித்தரமான வாதத்தை ஒன்ராரியோ அரசுதரப்பு
வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடைய நீதிக்கான போராட்டத்தை தாய் மண்ணிலும்
புலத்திலும் மூழ்கடிப்பதற்காக மிகவும் கடினமாக உழைத்து வருவது நாம் அனைவரும்
அறிந்த உண்மை.

‘Tamil Genocide Education Week Act’ சட்டம்

இலங்கை அரசாங்கம் அதனது ஆதரவாளர்களுக்கூடாக ஒன்ராரியோ
மாகாணத்தில் விஜய் தணிகாசலத்தின் கடும் முயற்சிகளுக்கு மத்தியில்
ஒன்ராரியோ அரசாங்கத்தின் ஆதரவோடு, அனைத்துக் கட்சியினாலும் அங்கீகரிப்பிற்கு
உட்படுத்தப்பட்டு, மாகாராணியின் அங்கீகாரம் பெறப்பட்டு, ‘Tamil
Genocide Education Week Act’ என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஒன்ராரியோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த மே 24ஆம் திகதி் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் ஒன்ராரியோ அரசியல் யாப்பை மீறவில்லை: ஒன்ராரியோ அரசுதரப்பு(Photo)

“ஒன்ராரியோ மாகாண அரசு என்பது கனடிய மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ஒரு அரசு
எனவும், ஒன்ராரியோ அரசிற்கு இன அழிப்பு போன்ற வெளிவிவகார விடயங்களில் தலையிட
உரிமை இல்லை எனவும், கனடிய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தமிழ் இன
அழிப்பை அங்கீகரிக்காத நிலையில் ஒன்ராரியோ அரசு இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது தவறு ” எனும் அடிப்படையிலும் எதிர்த்தரப்பு வாதம் அமைந்திருந்தது.

இலங்கை அரசாங்க தரப்பில் இந்த வாதத்தை எதிர்த்து வாதிட்ட ஒன்ராரியோ அரச தரப்பு
வழக்கறிஞர்கள் மிகவும் திறம்பட பல எடுத்துக்காட்டுகளை முன்வைத்து,  “Tamil Genocide Education Week Act என்பது சட்டபூர்வமானது என்பதையும் ஒன்ராரியோ
அரசிற்கு இச்சட்டத்தை நிறைவேற்ற அதிகாரம் உண்டு” எனவும் வாதிட்டனர்.

குறிப்பாக “ஒன்ராரியோ மாகாணம் தமிழ் இன அழிப்பை பற்றி ஒன்ராரியோ மக்களுக்கு
அறிவூட்டுவதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது எனவும் இன அழிப்பை
அங்கீகரிப்பது தொடர்பாக நாம் எமது சட்ட வரைபை மீறிச் செயற்படவில்லை” எனவும்
வாதிட்டனர்.

எதிர்த்தரப்பு வாதம்

கனடிய அரசியல் அமைப்பு வரைபை பொறுத்தமட்டில் கல்வி அதிகாரம் மாகாண அரசாங்கத்திடமும் வெளிநாட்டு
கொள்கைகள் விவகாரம் கனடிய மத்திய அரசிடமும் உள்ளது. மத்திய அரசின் சட்ட
வரைமுறைக்கு உட்பட்ட விவகாரங்களில் மாகாண அரசு தலையிடுவது என்பது கனடிய
அரசியல் அமைப்பிற்குப் புறம்பானது என்பதே இங்குள்ள எதிர்த்தரப்பு வாதம்.

இதன் பொருட்டு ஏறக்குறைய 10 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தின் பொழுது அரச தரப்பு
வழக்கறிஞர்கள் “நாம் மத்திய அரசிற்குட்பட்ட வெளி விவகாரமான தமிழ் இன அழிப்பை
அங்கீகரிக்க முற்படவில்லை. நாம் எமது மாகாண அரசியல் அமைப்பின்படி தமிழ் இன
அழிப்பு தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டவே இச்சட்டம் அமைத்துள்ளோம்” என
மிகவும் நுட்பமாக வாதிட்டனர்.

தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் ஒன்ராரியோ அரசியல் யாப்பை மீறவில்லை: ஒன்ராரியோ அரசுதரப்பு(Photo)

இது தேர்தல் காலம் என்பதால் சமூக வலைத்தளங்களில், மாகாண அரச வழக்கறிஞர்கள்
ஒன்ராரியோ அரசாங்கம் தமிழ் இன அழிப்பை அங்கீகரிக்கவில்லை எனக் கூறினார்கள்
எனும் பகுதியை மட்டும் பிரச்சாரத்திற்காக சிலர் அரசியல் ஆதாயம் கருதி
பயன்படுத்தி வருகின்றார்கள்.

முன்னாள் ஒன்ராரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் மற்றும் மந்திரிமார் உட்பட
அனைவரும் தமிழின அழிப்பை அங்கீகரித்து அறிக்கை விட்டது மட்டுமல்லாது ஒன்ராரியோ
மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெச்சே தமிழின அழிப்பு
அறிவூட்டல் வாரத்திற்கென உத்தியோகபூர்வமாக நிதி வழங்கியமையும், கடந்த மே 18
அன்று தமிழின அழிப்பை எதிர்த்து மக்கள் மத்தியில் குரல் கொடுத்தமையும் இங்கு
குறிப்பிடத்தக்கது.

இறுதித் தீர்ப்பு

தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் ஒன்ராரியோ அரசியல் யாப்பை மீறவில்லை: ஒன்ராரியோ அரசுதரப்பு(Photo)

தமிழின அழிப்பு நடந்ததை ஏற்காமல் ஒன்ராரியோ அரசாங்கம் தமிழின அழிப்பு
அறிவூட்டல் வாரம் என்ற சட்டமூலம் ஒன்றை உருவாக்கி இருக்குமா என்ற கேள்விக்கான
விடையை மக்கள் தெளிவாக உணர்ந்து செயற்படுவதென்பது இக்கால கட்டத்தில் மிகவும்
முக்கியமான விடயமாகும்.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பு
வெளிவருவதற்கு மூன்றிலிருந்து ஆறு மாதங்கள்வரை எடுக்கும் என்று
அறியப்படுகின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.