பெறுவது அதிகம், கொடுப்பது குறைவு  

P Chidambaram, ப சிதம்பரம்

P Chidambaram writes: Rob Peter more, pay Peter less: கடந்த   மே 21ம் தேதி பெட்ரோலுக்கு லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 6 ரூபாயும் கலால் வரியை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்தார். 

மத்திய-மாநில உறவுகள் இவ்வளவு மோசமானதில்லை என்று கடந்த வாரம் எழுதியிருந்தேன். அடுத்த சில நாட்களில் மற்றொரு மோதல் உருவாகியுள்ளது. அதாவது, யார் அதிகமாக வரிகளை குறைப்பது என்று ஒரு சர்ச்சை தோன்றியிருக்கிறது.

கடந்த மே 21 அன்று, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 6 ரூபாயும் “கலால் வரியை” குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பு மிகவும் தாமதமாக கிடைத்ததாக தெரிகிறது. அன்றைய அனைத்து சேனல்களும் செய்தித்தாள்களும் கலால் வரி குறைந்துள்ளதாக செய்தி வெளியிட்டன. அது தவறு. அதாவது மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப் படாத கூடுதல் உற்பத்தி வரியில் தான் வரிக்குறைப்பு செய்யப்பட்டது.  

அடுத்து மே 22ம் தேதி நிதி அமைச்சர் மாநிலங்களை குற்றம் சாட்டினார். நான் உற்பத்தி வரியை குறைத்து விட்டேன். நீங்கள் வாட் வரியை குறையுங்கள் என்று சொன்னார். அதாவது மாநிலங்களை விட மத்திய அரசு தான் உயர்வு எனும் வகையில் அவரது பேச்சு இருந்தது. ஆனால் வரிகள் தொடர்பாக ஆராய்ந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்குமாறு மாநிலங்களை கேட்க மத்திய அரசிடம் எந்த வழக்கும் இல்லை என்பது தெளிவாகியது.

எண்கள் பொய் சொல்லாது

முதலில் இந்த வரி குறைப்பு குறித்து ஆராயலாம். கூடுதல் உற்பத்தி வரி மூலம் ஒன்றிய அரசுக்கு அதிகமாக வருவாய் கிடைக்கிறது. கூடுதல் கலால் வரி (சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் அல்லது RIC என்றும் அழைக்கப்படுகிறது), சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) மற்றும் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாத வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி (AIDC) ஆகியவற்றிலிருந்து மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப் படுவதில்லை. 2014 மே மாதம் முதல் அனைத்து கலால் வரிகளும் பெட்ரோல் மீதான லிட்டருக்கு ரூ.9.48 ஆகவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.3.56 ஆகவும் இருந்தது. மே 21, 2022க்குள், பெட்ரோல் மீதான வரிகளை லிட்டருக்கு ரூ.27. 90 ஆகவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.21.80 ஆகவும் மத்திய அரசு உயர்த்தியது. அதாவது லிட்டருக்கு ரூ.18 அதிகரித்தது.

அடுத்ததாக பகிரப்பட்ட வரி வருவாயில், மத்திய அரசு 59 சதவீதத்தையும், அனைத்து மாநிலங்களும் மீதமுள்ள 41 சதவீதத்தை நிதி ஆயோக் நிர்ணயித்த சதவீதங்களின்படி பகிர்ந்து கொள்கின்றன. பெட்ரோலிய பொருட்களில் இருந்து அனைத்து மாநிலங்களும் சேர்ந்து ஒரு குறைந்த தொகையை மட்டுமே பெறுகின்றன: பெட்ரோலுக்கு லிட்டருக்கு 57.4 பைசா மற்றும் டீசல் லிட்டருக்கு 73.8 என்ற அடிப்படை கலால் வரி மூலம் எந்த வருமானமோ, அல்லது நஷ்டமோ இல்லை. வருவாயின் உண்மையான ஆதாரம் பகிரப்படாத கலால் வரிகள் மட்டுமே. பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.18 உயர்த்தி விட்டு மே 21, 2022 அன்று நிதியமைச்சர் லிட்டருக்கு ரூ.8 மற்றும் ரூ.6 குறைத்தார். இதைத்தான் பீட்டரிடம் அதிகமாக வாங்கி விட்டு அவருக்கே மீண்டும் குறைத்து கொடுப்பது என்று குறிப்பிடுகிறேன்.  

வாட் வரி தான் முக்கிய வருவாய்

பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் மத்திய அரசு திரட்டும் வருவாயில் மாநிலங்களுக்கு எதுவும் கிடைக்காது என்பது வெளிப்படையாக தெரியக்கூடிய ஒன்று. அவர்களின் முக்கிய வருவாய் ஆதாரம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி மற்றும் மதுபானத்தின் மீதான வரி. மாநிலங்களின் மொத்த வருவாயில் மாநிலங்களின் சொந்த வருமானம் குறைந்து கொண்டே வரும் நிலையில் வாட் வரியை மேலும் குறைப்பது மாநிலங்களுக்கு நிதிச்சுமையை கொடுக்கும். அத்துடன் வாட் வரியை மேலும் குறையுங்கள் என்று மத்திய அரசு கேட்பது கிடைப்பதையும் இழந்து விட்டு பிச்சை எடுப்பதற்கு சமமாகும். ஆனாலும், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் வாட் வரியை குறைத்துள்ளன. அனைவருக்கும் பொதுவானவர்களாக கருதப்படுபவர்கள் மத்திய-மாநிலங்களின் நிதி அதிகாரங்கள் மற்றும் உறவுகளின் முழு வரம்பையும் விரிவாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். குறிப்பாக, ஜிஎஸ்டி சட்டங்கள் தொடர்பான பிரிவுகள் 246A, 269A மற்றும் 279A ஆகியவை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். சொந்த வளங்களைத் திரட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி அதிகாரங்கள் இருக்க வேண்டும். வருமான குறைவுடன் இருக்கும் மாநிலங்கள் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதியை பகிர்ந்தளிக்கவில்லை என்பதும், அதன் விளைவாக தான் அரசியலமைப்பின் 73 வது மற்றும் 74 வது திருத்தங்கள் நீண்டகாலமாக செயல்படாமல் இருக்கின்றன.  

இதையும் படியுங்கள்: பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய தருணம்  

மத்திய அரசின் கைகளில் உள்ள நிதி அதிகாரங்கள் அனைத்து அதிகாரங்களையும் அதனிடம் குவிய வழிவகுத்து விட்டன. மாநிலங்களின் சட்டமியற்றும் அதிகாரங்களில் கூட ஒன்றிய அரசு தலையிடுகிறது. விவசாயம் தொடர்பாக மாநில அரசு இயற்றிய 3 சட்டங்களில் ஒன்றிய ஒரசு தனது வரி அதிகாரத்தை அதிகமாக பயன்படுத்துகிறது. கப்பல்களின் சரக்கு கட்டணம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சுட்டிக்காட்டி இருப்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மேற்கு வங்க தலைமை செயலர் ஓய்வு பெற வேண்டிய நாளில் அவரை தண்டிப்பதற்காக அவரை மத்திய அரசு பணிக்கு மாற்றி உத்தரவிட்டதை நாம் மறந்துவிட முடியாது. இப்போது நீங்கள் முடிவு செய்யுங்கள், உங்களுக்கு என்ன மாதிரியான அரசு தேவை? ஒன்றிய அரசுக்கு கீழ்படிந்த மனிதாபிமான ஒற்றை தலைமை கொண்ட இந்தியாவா? துடிப்பான வளர்ச்சிப் பாதையில் செயல்படும் மாநிலங்களைக் கொண்ட இந்தியாவா?

தமிழில் : த. வளவன் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.