உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனைகளைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிகத் சரீன் தங்கப் பதக்கமும், மனிஷா மவுன், பர்வீன் ஹூடா ஆகியோர் வெண்கலப் பதக்கங்களும் வென்றனர்.
இவர்கள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பதக்கங்களைக் காட்டி வாழ்த்துப் பெற்றனர்.