பள்ளிப் புத்தகங்களில் ஆபாச ஓவியங்கள்;சீனாவில் சர்ச்சை

சீனாவில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், கணிதப்பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஓவியங்களுக்கு பெற்றோர்களிடையேயும், நிபுணர்கள் இடையேயும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்த பாடப்புத்தகங்களில் உள்ள ஓவியங்களில் சில ஓவியங்கள், சிறுவர்கள், சிறுமிகளின் உடையைப் பிடித்து இழுப்பது போலவும், ஆபாச சைகைகளை காண்பிப்பது போலவும் அமைந்துள்ளன. அதே போன்று, குழந்தைகள் சிறிய கண்கள், அகன்ற நெற்றியுடன் இருப்பது போன்ற ஓவியங்கள் உருவகேலியையும், இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | இந்தியாவின் வெற்றியும், சீனாவின் தோல்வியும்…! பிரதமர் மோடியைப் பாராட்டிய ஜோ பைடன்

அதோடு மட்டுமில்லாமல், இப்புத்தகத்தில் சீனக் கொடி தவறாக வரையப்பட்டிருப்பதோடு சில குழந்தைகள் அமெரிக்கக் கொடியின் வண்ணத்தில் உடை அணிந்திருப்பது போன்ற ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. இது சீனாவுக்கு எதிராக இருப்பதோடு அமெரிக்க ஆதரவு மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Controversy pictures in chinese text book

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகங்களை உரிய ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக சீன அரசு மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பலத்த கண்டனங்களைத் தொடர்ந்து, இந்த புத்தகங்களைத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ள சீன அரசு, இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க | Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.