நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் ஆபத்தான நிலை காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சமீப காலமாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெற்றோரின் கவனத்தில் இருந்து விலகும் வாய்ப்புகள் அதிகம் காணக்கூடியதாக இருப்பதாக அதிகாரசபையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை பெரியவர்கள் சிறுவர்கள் ஊடாக வெளிப்படுத்த முற்படும் நிலையொன்று காணப்படுகின்றது. இதன் காரணமாக முன்பை விட இக்காலப்பகுதியில் சிறுவர்கள் மீது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.