பொதுவாக வங்கிகளில் பல்வேறு வகையான கடன் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் வாங்கும் கடன் பர்சனல் லோன் தான்.
ஏனெனில் பர்சனல் லோனை எளிதில் பெற முடியும். இதில் மற்ற கடனை காட்டிலும் ஆவணங்கள் குறைவு. எனினும் மற்ற கடன்களை காட்டிலும் இதில் வட்டி அதிகம்.
இன்றைய காலக்கட்டத்தில் பலரும் வீட்டுக் கடன் என மற்ற கடன்களுக்கு மாற்றாக பதிலாக இந்த தனி நபர் கடன்களையே நாடுவதை காண முடிகின்றது.
3 ஆண்டுகளில் 6000 புதிய கிளைகள்: எச்டிஎஃப்சி வங்கி திட்டம்
ஹெச் டி எஃப் சி வங்கி
ஹெச் டி எஃப் சி வங்கியினை பொறுத்த வரையில் வட்டி விகிதம் வருடத்திற்கு 10.50 – 21% வரையில் உள்ளது.
குறைந்தபட்ச வயது – 21, அதிகபட்ச வயது -60
குறைந்தபட்ச வருமானம் – நிகர வருமானம் ரூ.15,000. இதே ஹைத்ராபாத், சென்னை, புனே, அகமதாபாத், மும்பை, கொச்சின், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு எனில் 20,000 ரூபாய் வருமானம் இருக்க வேண்டும்.
12 – 60 மாதங்களில் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.
15 லட்சம் ரூபாய் வரையில் கடன் கிடைக்கும்.
டர்போலோன் – சோலமண்டலம் பர்சனல் பைனான்ஸ்
வட்டி விகிதம் – 15%
வயது வரம்பு – 21 – 60 வயதாகும்
செயல்பாட்டுக் கட்டணம் – கடன் தொகையில் 3%
கடன் தொகை – ரூ.5 லட்சம் வகையில்
கடன் காலம் – 12 – 48 மாதங்கள்
எஸ்பிஐ
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவினை பொறுத்தவரையில் இரண்டு வகையான பர்சனல் லோன் உண்டு.
இதில் எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரெடிட் கடனிற்கு – 10.60% வட்டி ஆரம்பமாகிறது.
வயது வரம்பு – 21 – 60 வயதாகும்.
குறைந்தபட்ச வருமானம் – ரூ.15000
கடன் வரம்பு – ரூ.25,000 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் பெறலாம்
கால அவகாசம் – 60 மாதம் வரையில்
எஸ்பிஐ பர்சனல் லோன் /ஓய்வூதியதாரர்களுக்கு
இதில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 9.75% – 10.25%
வயது வரம்பு – 21 – 76 வயது வரையில் வாங்கிக் கொள்ளலாம்
கடன் – ரூ.25,000 – 14 லட்சம் ரூபாய் வரை பெறலாம்.
கால அவகாசம் – 84 மாதங்கள் வரையில் கட்டலாம்
பஞ்சாப் நேஷனல் வங்கி
வட்டி விகிதம் வருடத்திற்கு – 8.7% – 14.25% வரையில்
வயது வரம்பு – 21 – 60 வயது
வருமானம் – வங்கி விதிமுறைகளை பொறுத்து
கடன் – ரூ.50,000 – ரூ.10 லட்சம் அல்லது வருமானத்தில் 20 மடங்கு
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு – 12% – 21%
வயது வரம்பு – 21 – 60 வயது
குறைந்தபட்ச வருமானம் – ரூ.15,000
கடன் அளவு – ரூ.50,000 முதல் 15 லட்சம் ரூபாய் வரையில்
கால அளவு – 12 – 60 மாதங்கள்
கனரா வங்கி
கனரா வங்கி டீச்சர்ஸ் பர்சனல் லோன்:
வட்டி விகிதம் – 12.40%
வயது வரம்பு – 21 – 60
குறைந்தபட்ச வருமானம் – ரூ.10,000
கடன் அளவு – ரூ. 3 லட்சம் ரூபாய் (அ)10 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் எது குறைவோ அது
கால அளவு – 48 மாதங்கள் வரை
கனரா வங்கி பட்ஜெட் பர்சனல் லோன்
வட்டி விகிதம் – 11.30 – 12.30%
வயது வரம்பு – வங்கியின் விருப்பப்படி
குறைந்தபட்ச வருமானம் – வங்கியின் விருப்பப்படி
கடன் அளவு – ரூ. 3 லட்சம் ரூபாய் (அ) 6 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் எது குறைவோ அது
கால அளவு – 60 மாதங்கள் வரை
மஹிந்திரா பைனான்ஸ் பர்சனல் லோன்
வட்டி விகிதம் – 26% வரையில்
வயது வரம்பு – 21 – 58
கடன் அளவு – ரூ. 3 லட்சம் வரை
கால அளவு – 3 வருடங்கள் வரை
வருமான வரம்பு எதுவும் கொடுக்கப்படவிலை
ஐடிபிஐ வங்கி பர்சனல் லோன்
வட்டி விகிதம் வருடத்திற்கு – 8.15 – 10.90% வரையில்
வயது வரம்பு – 21 – 60 வயது வரை
குறைந்தபட்ச வருமானம் – ரூ.15,000
கடன் அளவு – ரூ.25000 – 5 லட்சம் வரை
கால அளவு – 12 – 60 மாதங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பர்சனல் லோன்
வட்டி விகிதம் வருடத்திற்கு – 10.80%
வயது வரம்பு – 21 – 60 வயது வரை
குறைந்தபட்ச வருமானம் – ரூ.5,000-க்கு மேல்
கடன் அளவு – ரூ. 5 லட்சம் வரை
கால அளவு – 60 மாதம் வரை
Top personal loan lending banks & finances in India: which one is best for loan provider
Top personal loan lending finances in India: which one is best for loan provider