iPhone 13 Clone: வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ ஐபோனா?

iPhone Clone: சீனாவில் LeEco என்று அறியப்பட்டு, தற்போது Letv என்று பெயர் மாற்றம் கண்டுள்ள நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இது அச்சு அசலாக ஐபோன் போன்ற வடிவமைப்புடன் இருப்பதால், சமூக வலைதளத்தில் இதன் புகைப்படங்கள் வேகமாகப் பரவி வருகிறது.

லி-எகோ பெயரில் ப்ளூடூத் ஹெட்போன்களை கடந்த வருடம் அறிமுகம் செய்த நிறுவனம், அப்படியே காணாமல் போனது. தற்போது புதிய தோற்றத்தில் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளது.

2017ஆம் வருடம், LePro 3 AI போனை நிறுவனம் வெளியிட்டது. அதன்பிறகு தற்போது புதிய லிடிவி ஒய்1 ப்ரோ ஸ்மார்ட்போனை சீன சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.

TikTok Re-Entry: இந்தியாவிற்குள் நுழையும் டிக்டாக்; அப்போ இனி இன்ஸ்டா ரீல்ஸ் கதி!

லிடிவி ஒய்1 ப்ரோ அம்சங்கள் (Letv Y1 Pro Specifications)

இது ஆப்பிள் ஐபோன் 13 போன்று அதே தோற்றத்தில் இருக்கிறது. பின்பக்க இரண்டு கேமரா கொண்ட அமைப்பு, முன்பக்க நாட்ச் என அனைத்து ஆப்பிளை பிழை இல்லாமல் நிறுவனம் காப்பி அடித்துள்ளது.

லிடிவி Y1 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் CNY 499 என்ற விலையில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.5,850 ஆக உள்ளது. அப்படி என்ன இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது என்று பார்க்கலாம்.

சிறந்த 55″ ஸ்மார்ட் டிவிக்களின் பட்டியல் – விலையும் ரொம்ப கம்மிதான்!

Letv Y1 Pro ஸ்மார்ட்போனில் 6.54 இன்ச் எச்டி+ எல்சிடி பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இது UniSoc T310 புராசஸர் கொண்டு இயக்கப்படுகிறது. 4ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வரை வழங்கப்படுகிறது. மேலும், ஸ்டோரேஜை நீட்டிக்க எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் கேமராவைப் பொருத்தவரை, பின்பக்கம் 8 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன், ஒரு AI கேமராவும் உள்ளது. செல்பி எடுக்க 5 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. இதில் பேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது.

Metaverse Rape: தொடாமல் இப்படி செய்ய முடியுமா; மெட்டாவெர்ஸில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை!

லிடிவி ஒய்1 ப்ரோ விலை (Letv Y1 Pro Price)

லிடிவி ஒய்1 ப்ரோ ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. சார்ஜிங் செய்ய USB டைப்-சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டார் ஒயிட், மிட்நைட் பிளாக், ஸ்டார் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் Y1 ப்ரோ கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்டுகளில் வாங்கக் கிடைக்கிறது. இதன் 4GB+64GB CNY 499 (ரூ. 5,820) ஆகவும், 4GB+128GB விலை CNY 699 (ரூ.8,154) ஆகவும், 4GB+256GB விலை CNY 899 (ரூ.10,487) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லிடிவி Y1 ப்ரோவை சீனாவில் இப்போது வாங்கலாம். ஆனால் சீனாவிற்கு வெளியே ஸ்மார்ட்போன் எப்போது கிடைக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.