பொம்மை வாங்கலையோ.. பொம்மை..!! முகேஷ் அம்பானி புதிய டீல்..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வரும் திட்டத்தோடு பல முன்னணி பிராண்டுகளை உணவு முதல் பேஷன் பிராண்டுகள் வரையில் கைபற்றி வருகிறது.

இதன் வாயிலாக ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதற்கிடையில் ரீடைல் துறையில் தற்போது கௌதம் ஆதானியின் அதானி குழுமம் இறங்கியுள்ளதால் போட்டி அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் இத்துறையில் நிறுவன கைப்பற்றலும் அதிகரித்துள்ளது.

ஈகாமர்ஸ் துறைக்குள் நுழையும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி வேறலெவல் திட்டம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் முக்கியக் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் மற்றும் பிளாஸ்டிக் லெக்னோ SPA என்னும் இத்தாலிய நிறுவனத்துடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளது.

பிளாஸ்டிக் லெக்னோ SPA

பிளாஸ்டிக் லெக்னோ SPA

இந்தக் கூட்டணி ஒப்பந்தம் மூலம் பிளாஸ்டிக் லெக்னோ SPA நிறுவனத்தின் இந்திய பொம்மை உற்பத்தி வர்த்தகத்தில் சுமார் 40 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் கைப்பற்ற உள்ளது.

பொம்மை உற்பத்தி

பொம்மை உற்பத்தி

இந்த முதலீடு மூலம் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் ஏற்கனவே வைத்திருக்கும் பொம்மை வர்த்தகத்தைப் பெரிய அளவில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும், குறிப்பாக உற்பத்தியிலும் வரிவாக்கம் செய்ய இத்தாலி நிறுவனத்தின் இந்திய பங்குகள் பெரிய அளவில் உதவும்.

25 ஆண்டுகள்
 

25 ஆண்டுகள்

பிளாஸ்டிக் லெக்னோ SPA இத்தாலியின் சுனினோ குழுமத்திற்குச் சொந்தமானது, இது ஐரோப்பாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொம்மை தயாரிப்பில் உள்ளது. இக்குழுமம் 2009 இல் இந்திய பொம்மை வர்த்தகத்தைக் கைப்பற்ற திட்டமிட்டு இந்தியாவில் உற்பத்தித் தளத்தை அமைத்தது.

 இரு பொம்பை நிறுவனங்கள்

இரு பொம்பை நிறுவனங்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ஏற்கனவே பிரிட்டன் பொம்பை நிறுவனமான Hamleys மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட Rowan ஆகிய இரு பிராண்டுகள் வைத்துள்ளது. இதில் Hamleys 15 நாடுகளில் 213 நேரடி கடைகளை வைத்துள்ளது.

லாபம்.. சுபம்..

லாபம்.. சுபம்..

இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிளாஸ்டிக் லெக்னோ SPA-வின் பொம்மை உற்பத்தி தளத்தை வைத்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்று, தற்போதைய அளவை காட்டிலும் அதிகப்படியான லாபத்தைப் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh Ambani’s Reliance signs JV with Plastic Legno for toy manufacturing in India

Mukesh Ambani’s Reliance signs JV with Plastic Legno for toy manufacturing in India பொம்மை வாங்கலையோ.. பொம்மை..!! முகேஷ் அம்பானி புதிய டீல்..!

Story first published: Wednesday, June 1, 2022, 21:38 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.