சீனாவுடனான போருக்கு தயாராகும் தைவான்: துப்பாக்கிகளுடன் பயிற்சியில் குவித்த பொதுமக்கள்!


தைவான் மற்றும் சீனா இடையே உருவாகி வரும் போர் பதற்றம் காரணமாக, தைவானின் சுற்றுலா வழிகாட்டி முதல் டாட்டூ கலைஞர்கள் வரை பெருவாரியான பொதுமக்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து, குடியரசு நாடான தைவானை சீனா தனக்கு சொந்தமான பகுதி என தெரிவித்து வருகிறது, இதன் முலம் தைவானுக்கும் சீனாவிற்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேலும் இதனால் வளர்ந்து வரும் சீனாவின் ராணுவ பலம் மற்றும் அதன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கட்டாய ராணுவ சேவையை அமுல்படுத்துவது தொடர்பாக தைவான் அரசும் பரிசிலீத்து வருகிறது.

சீனாவுடனான போருக்கு தயாராகும் தைவான்: துப்பாக்கிகளுடன் பயிற்சியில் குவித்த பொதுமக்கள்!

ஆனால் இதுவரை சீனா எத்தகைய வழக்கத்துக்கு மாறான ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபடுவதாக  தைவான் அறிவிக்காத நிலையிலும் நாட்டின் ராணுவ எச்சரிக்கையை தைவான அரசு அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை போன்று, தைவானின் மீது சீனா ராணுவ தாக்குதலைகளை மேற்கொண்டால், அதனை எதிர்கொள்வதற்காக தைவானின் சுற்றுலா வழிகாட்டி முதல் டாட்டூ கலைஞர் வரை எவ்வாறு துப்பாக்கி சுடு நடத்துவது என்பது தொடர்பான பயிற்சி வகுப்புகளில் ஆர்வமுடன் கலந்துகொள்ள தொடங்கி இருப்பதாக தைவானில் போர் திறன் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவுடனான போருக்கு தயாராகும் தைவான்: துப்பாக்கிகளுடன் பயிற்சியில் குவித்த பொதுமக்கள்!

இதுத் தொடர்பாக தைவானில் போர் திறன் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ள கருத்தில், ஏர்சாஃப்ட் துப்பாக்கிகளை எப்படி சுடுவது அல்லது உலோகம் அல்லாத எறிகணைகளை சுட வடிவமைக்கப்பட்ட குறைந்த சக்தி கொண்ட சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது ஆகியவை தொடர்பான பயிற்சி வகுப்புகளில் பொதுமக்கள் வழக்கத்தை விட  நான்கு மடங்கு அதிகமாக தங்களை பதிவு செய்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளது.

இவ்வாறு தங்களை பயிற்சியில் பதிவு செய்துள்ள பெருவாரியான மக்கள், தங்களில் வாழ்நாளில் முதல்முறையாக துப்பாக்கிகளை கையாள கற்றுக் கொள்கின்றனர் என தெரிவித்துள்ளது.

சீனாவுடனான போருக்கு தயாராகும் தைவான்: துப்பாக்கிகளுடன் பயிற்சியில் குவித்த பொதுமக்கள்!

இதனைத் தொடர்ந்து, இந்த துப்பாக்கி சுடு பயிற்சியில் ஈடுபட்டுள்ள தைவானின் டாட்டூ கலைஞர் Su Chun(39) தெரிவித்த கருத்தில், நான் சில போர் திறன் பயிற்சிகளை கற்றுக்கொள்ள விரும்புகிறேன், ஏன்னென்றால் இந்த திறன் எத்தகைய சூழலிலும் உதவலாம் என தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு; உக்ரைன் மீதான 100வது போர் நாளில்…களமிறங்கியது ரஷ்யாவின் சிறப்பு அணுஆயுதப் படை

சீனாவுடனான போருக்கு தயாராகும் தைவான்: துப்பாக்கிகளுடன் பயிற்சியில் குவித்த பொதுமக்கள்!

மேலும் சீனாவின் படையெடுப்பை முறியடிக்க தைவான் அரசு எங்களை அழைக்கும் போது இந்த திறன் உதவலாம் எனவும் அத்துடன் இங்கு யாருக்கும் போருக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இல்லை, எனக்கும் போருக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இல்லை ஆனால் அசாதாரணமாக ஏதேனும் நடந்தால் அதற்கு தயராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

சீனாவுடனான போருக்கு தயாராகும் தைவான்: துப்பாக்கிகளுடன் பயிற்சியில் குவித்த பொதுமக்கள்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.