திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நுணாக்காடு தென்பாதி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரது மகன் தினேஷ் (10). இவர், கோடை விடுமுறையை முன்னிட்டு ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தனது மாமா குமரேசன் என்பவரது வீட்டிற்கு வந்துவிட்டு இன்று குமரேசனுடன் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் தினேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குமரேசன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருத்துறைப்பூண்டி போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய ட்ராக்டர் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
