சவுதியில் ரூ. 38 லட்சம் கோடியில் இரட்டை கோபுரங்கள்| Dinamalar

ரியாத்: சவுதி அரேபியாவில், 38.5 லட்சம் கோடி ரூபாய் செலவில், உலகின் மிக நீண்ட இரட்டை கோபுரங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவசரசராக முகமது பின் சல்மான் உள்ளார். உலகிலேயே மிக நீளமான கட்டடங்கள் கட்ட வேண்டும் என்பது, இவரது விருப்பம்.
‘ஸ்கை ஸ்ராப்பர்ஸ்’ என அழைக்கப்படும், வானுயுர கோபுரங்கள், விண்ணை நோக்கி செங்குத்தாக கட்டப்படுவது வழக்கம். ஆனால், சவுதியில் புதிய முயற்சியாக வானுயுர இரட்டை கோபுரத்தை, பூமியில் நீளவாக்கில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரட்டை கோபுரம், ௧,௬௪௦ அடி நீளம் கொண்டதாக இருக்கும். அதாவது, ௩௯ கி.மீட்டர் துாரத்துக்கு இந்த கட்டடம் பரந்து விரிந்திருக்கும். சவுதியின் பிரபலமில்லாத பகுதியில் ௩௮.௫ லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்த இரட்டை கோபுரம் கட்டப்பட உள்ளது. இதில் குடியிருப்புகள், கடைகள், அலுவலகங்கள் இடம் பெற உள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.