மேற்குலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகின்றது. யாழில் இன்னும் குரங்கு அம்மை நோய் பரவியதாக எந்த பதிவும் இடம்பெறவில்லை.
ஆனாலும் உங்களது உறவுகள் யாரேனும் ஆபிரிக்க நாடுகளில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ வருகை தரும் போது அவர்களுக்கு காய்ச்சல் அல்லது காய்ச்சலுடன் கூடிய சரும கொப்பளங்கள் மற்றும் ஏதேனும் மாற்றங்களை இனங்கண்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்று யாழ்ப்பாண மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்குலக நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் தொடர்பில் யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (01) யாழ். போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று நோய் அளவிற்கு மிகவும் கடுமையானதாகவோ அல்லது எல்லோருக்கும் பரவும் வேகத்தையோ குரங்கு அம்மை நோய் கொண்டிருக்வில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது..
இந்த நோய் பரவும் சந்தர்ப்பம் ஏற்படும் என்று அறிந்தால் அது குறித்து நாம் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் ஊடாக அது தொடர்பான வழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்துவோம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்..
தற்போது நாம் மேலதிகமாக எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டிய தேவை இன்னும் ஏற்படவில்லை.
இதேவேளை இந்த அறிகுறிகளுடன் கூடிய நோயாளரை இனங்காணும் வைத்தியர்கள் உடனடியாக இது சம்பந்தமான மருத்துவர்களுக்குகோ அல்லது றுர்ழு இற்கேனும் அறிவிக்க வேண்டும் என்றும் மேலும் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடக சந்திப்பில் பொது வைத்திய நிபுணர்களான கஜந்தன்இ கேதீஸ்வரன் ஆகியோரும் மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன்இ நுண்ணியல் தொற்று நோய் வைத்திய நிபுணர் ஆகியோரும் குரங்கு அம்மை நோய் தொடர்பில் விளக்கமளித்தனர்.