புதுச்சேரி விழுப்புரம் கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், முதல்வர் மகேந்திரன், துறை முதல்வர் மெடில்டா ஆகியோர் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளியல் துறை டீன் சுந்தர வரதராஜன், புதுச்சேரி வேளாண் துறை துணை இயக்குனர் சிவசுப்ரமணியன் சிறப்புரையாற்றினர்.
சிறப்பு அமர்வுகளில் ஆச்சி மசாலா முன்னாள் பன்னாட்டு மார்க்கெட்டிங் மேலாளர் ரமேஷ், உணவு பதப்படுத்துதல், இந்திய தொழிற்சாலைகள் குறித்து கலந்துரையாடினார். ஹைதராபாத் ‘இ-நாம்’ மாநில ஒருங்கிணைப்பாளர் பிரேம்நாத், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு குறித்தும், சென்னை வளர்ச்சி படிப்பு நிறுவன உதவி பேராசிரியர் உமாநாத் பயிர் சாகுபடியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உணவு நுகர்வு குறித்து பேசினர்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளியல் துறை உதவி பேராசிரியர் ரவிச்சந்திரன் அரசின் மின்னணு தொழில்நுட்ப முயற்சிகள் குறித்து விளக்கம் அளித்தார்.பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் வழங்கினர்.ஏற்பாடுகளை கணிதத் துறை பேராசிரியர்கள் சுப்பிரமணியன், அன்புக்கரசி, செயற்கை நுண்ணறிவு இயந்திரவழி கற்றல் துறை தலைவர் உஷாராணி ஆகியோர் செய்திருந்தனர்.
Advertisement