சென்னை: பாரதியின் ‘புதுமைப் பெண்’ எனும் தத்துவத்தில் உத்வேகம் பெற்ற பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தைச் சேர்ந்த ‘தனிஷ்க்’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து தமிழ் கலாச்சாரத்தை ஒளிரச் செய்யும் புதுமைப் பெண்களைக் கொண்டாட விரும்பி, இம்முயற்சியை முன்னெடுத்துள்ளது.
‘புதுமைப் பெண்’, தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலராகவும், புதுமையின் முன்னோடியாகவும் இருப்பதோடு, தங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த அனுபவங்களை ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். தனிஷ்க் ‘புதுமைப் பெண்’ ஃபேஸ்புக் பக்கத்திலும், அருகிலுள்ள தனிஷ்க் ஷோரூமுக்கும் சென்று இதுவரை 1000-க்கும் மேற்பட்ட புதுமைப் பெண்கள் தங்களது அனுபவத்தையும், வெற்றிக் கதைகளையும் பதிவு செய்துள்ளனர்.
‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து மேற்கொள்ளும் இந்த முன்னெடுப்பின் மூலம் தங்களைப் புதுமைப் பெண்ணாக அடையாளப்படுத்த முன்வரும் பெண்களைப் பற்றியோ, தாங்கள் அறிந்த வேறு புதுமைப் பெண்களைப் பற்றியோ பகிர்ந்துகொள்ள தனிஷ்க் அழைக்கிறது. புதுமைப் பெண்களைக் கொண்டாடும் விதமாக அவர்களைத் தங்கள் ஷோரூமுக்கு அழைத்து கவுரவிக்கவும் திட்டமிட்டுள்ளது.
புதுமைப் பெண்கள் தங்களது அனுபவங்களை tanishq.co.in/pudhumai-penn என்ற லிங்க்-கில் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது அருகாமையில் உள்ள தனிஷ்க் ஷோரூமுக்கு நேரில் சென்றும் பகிர்ந்து கொள்ளலாம். உங்களின் அனுபவங்கள் தனிஷ்க் ‘புதுமைப் பெண்’ ஃபேஸ்புக் பக்கத்திலும் இடம்பெறும்.