வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இருந்து வெளியேறப் போவதாக பண்டிட் இன மக்கள் அறிவித்ததை அடுத்து அவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீரில் பண்டிட் இன மக்கள் குறி வைத்து தாக்கப்படும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. பண்டிட் இனத்தை சேர்ந்த ராகுல் பட் என்பவர் கடந்த மாதம் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரஜினி பாலா என்ற பள்ளி ஆசிரியை நேற்று முன்தினம் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் அரசு தங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவில்லை எனில், காஷ்மீரை விட்டு வெளியேறப் போவதாக 4000 காஷ்மீர் பண்டிட்கள் அறிவித்தனர்.
இதையடுத்து காஷ்மீர் பண்டிட்களின் முகாம்கள் அவர்கள் அதிகம் வாழும் ஸ்ரீநகரின் இந்திரா நகர் போன்ற பகுதிளில் முழுவதும் நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டன. பேருந்துகள் தீவிர சோதனைக்கு பிறகே காஷ்மீரை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டன. பண்டிட் இன மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
Advertisement