சென்னை : சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்துவதற்காக ரூ.92.13 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க, நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கியுள்ளது.