கே.கே. மரணம் குறித்து போலீஸார் விசாரணை – சந்தேக மரணம் என வழக்கு!!

பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் இறப்பை சந்தேக மரணமாக பதிவுசெய்து காவல்துறை விசாரித்து வருகிறது.

கேகே கொல்கத்தாவில் 2 கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக சென்ற நிலையில் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார். அவரது மரணத்தை சந்தேக மரணமாக காவல்துறை பதிவுசெய்துள்ளது.

கேகே தங்கியிருந்த ஹோட்டலின் மேலாளர் மற்றும் பிற பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்வரை என்னென்ன நடந்தது என்பதை அறிய சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது.

kk

முதல்கட்ட விசாரணையில், கேகே பங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருந்ததாக தெரிகிறது. நிகழ்ச்சி அரங்கில், கிருஷ்ணகுமார் அசௌகரியமாக இருந்ததாகவும், அடிக்கடி வியர்வையை துண்டால் துடைத்துக்கொண்ட காட்சிகளும் கிடைத்துள்ளன.

அந்த இடம் மிகவும் வெப்பமாக இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேகே கூறியிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து ஹோட்டல் அறைக்கு திரும்பியபோதும், ஹோட்டலுக்குள் பெரும் ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்துள்ளது.

kk2

பலரும் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டியபோது ஒருசிலரை அனுமதித்த கேகே, பின்னர் அங்கிருந்து விலகி படியேறிச் சென்றுள்ளார். அங்குதான் அவர் மயங்கி தரையில் விழுந்துள்ளார். உடனே ஹோட்டல் நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது நெற்றியின் இடதுபுறத்திலும், உதட்டிலும் காயங்கள் இருக்கும் நிலையில், அவர் கீழே விழுந்தபோது ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உடற்கூராய்வுக்குப் பின்னரே இறப்பு குறித்து தெரியவரும்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.