இப்போ இது முக்கியம்… வருமான வரி சேமிக்க டாப் 5 வழிகள்!

வருமான வரி செலுத்தும் வரம்பிற்குள் வருபவர்கள் வரிச்சலுகை பெறுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. வரி செலுத்துபவர்கள் இந்த வழிமுறைகளில் தங்களுக்கு பொருத்தமானவைகளை தேர்வு செய்து கொள்ளலாம் . வரி சலுகைக்கு ஏற்ற வாய்ப்புகளை தேர்வு செய்யும்போது, அவை நிதி இலக்குகளுக்கு பொருத்தமாக இருப்பது அவசியம்.

வருமான வரியை சேமிக்க டாப் ஐந்து திட்டங்களை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பி.பி.எப்

80 சி பிரிவின் கீழ் வரும் பிபிஎப் திட்டம்: ஓய்வூதிய பாதுகாப்பிற்கு உதவும் பி.பி.எப் திட்டத்தில் முதலீடு செய்யும் போது ரூ. 1.5 லட்சம் வரை வரி சலுகை பெற முடியும். மேலும் இது , நீண்ட கால நிதி இலக்கிற்கும் கைகொடுக்கும்.

தேசிய ஓய்வூதிய திட்டம்

மத்திய அரசின் தேசிய ஓய்வூதியம் திட்டம் மூலம் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வரி சேமிப்பு செய்யலாம். இதில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை (Tier 1) இவை பிரிவு 80 சிசிடி (1), 80 சிசிடி (1b) கீழ் வருகிறது. இதில்  குறைந்தட்ச தொகையாக ரூ. 500 முதலீடு செய்யலாம். இரண்டாம் வகையில் (Tier 2) ரூ1000 முதலீடு செய்யலாம்.

ஆயுள் காப்பீட்டு திட்டம்

ஆயுள் காப்பீட்டு திட்டம் எடுத்திருந்தால் பிரிவு 80 சி -யின் கீழ் ரூ 1.5 லட்சம் வரை வரி சலுகை பெறலாம். இதுவே நீங்கள் ஆயுள் காப்பீட்டு திட்டம் மூலம்  முதலீடு செய்தால் ரூ 2.5 லட்சம் வரை வரிச்சலுகை பெற முடியும். 

ஈஎல்எஸ்எஸ் (ELSS)

ஈஎல்எஸ்எஸ் அல்லது ஈக்யூட்டி சார்ந்த சேமிப்பு திட்டங்கள் என்பது, வருமான வரியை சேமிக்கக் கூடிய ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட். இதில் முதலீட்டாளர்கள் 3 ஆண்டு காலம் வரை லாக்கின் பீரியட்டில் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வரும் வருமான வரி சலுகைகள் அனைத்தும் 80சி பிரிவில் வரும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால் அல்லது வழக்கமான ஹெல்த் செக்கப் செய்திருந்தால், பிரிவு 80 டி -யின் கீழ் பிரீமியம் விலக்கு கோரலாம். உங்களுக்காக, மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக நீங்கள் ஒரு சுகாதார காப்பீட்டு பாலிசியை எடுத்திருந்தால், ரூ. 25,000 வரை பிரீமியம் விலக்கு கோரலாம். இதில் பெற்றோரின் வயது 60 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும். உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால், வரி விலக்கு வரம்பு 50,000 ரூபாய் ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.