கண்டி மாவட்டத்தில் உணவுத் தேவைகளுக்காக எழுபத்தைந்தாயிரம் வீட்டுத்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார்.
இந்த வீட்டுத்தோட்ட வேலைத்திட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட 52 ஆயிரம் வீட்டுத்தோட்டங்கள் வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய மாகாணத்தில் உள்ள உணவுப் பாதுகாப்பிற்கான செயல்திட்டங்கள் தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏனைய வீட்டுத்தோட்டங்களுக்கு விதைகள் மற்றும் நடவுப் பொருட்கள் வழங்கப்படும் எனவும் எதிர்காலத்தில் வீட்டுத்தோட்டங்களை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் இவ்வருடம் 11,000 ஹெக்டேரில் பயிர்கள் பயிர்கள் பயிரிடப்படவுள்ளதாகவும், அதில் 5,000 ஹெக்டேரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். பசுமை வேளாண்மைத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டும் இயற்கை உரம் பயன்படுத்தப்படுவதால், திரவ உரம், விநியோகம் நிறைவடைந்துள்ளது என்றார்.
கரிம உரம் வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இயற்கை உரங்களை இடுவது சரியானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த பாவனையில் இருக்கும் பலாப்பழம் போன்ற உணவுப் பொருட்களில் மக்களின் ஆர்வத்தை அதிகரிப்பது, இறக்குமதி மாற்று வீட்டுக் கைத்தொழில் அறிமுகம், கால்நடை வளர்ப்பு அறிமுகம், உயிர்வாயு அலகுகள், உரம் உற்பத்தி போன்ற திட்டங்கள் கண்டியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் சந்தன தென்னகோன் மேலும் தெரிவித்தார். மாவட்டம் என்றார்.