பர்ஸ்ட் சோலார்-ன் பிரம்மாண்ட தொழிற்சாலை.. ஸ்ரீபெரும்புதூர்-ன் புதிய அடையாளம்..!

இந்தியா முழுவதும் பசுமை மின்சாரம் தயாரிப்புக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் சோலார் பேனல் அளவீட்டைக் குறைக்க வேண்டும் என்ற திட்டத்துடனும், இதேவேளையில் இந்தியாவில் சோலார் பேனல் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டது தமிழ்நாடு அரசு.

இதன் வாயிலாக 2020 டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்ய அமெரிக்க நிறுவனம் தற்போது பிள்ளைப்பாக்கம் பகுதியில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய சோலார் பவர் பிளான்ட்.. ITC நிறுவனம் மாஸ்..!

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசுடன் 2020ஆம் ஆண்டு இறுதியில், இந்தியாவில் சோலார் பேனல்-க்கு இருக்கும் டிமாண்ட்-ஐ உணர்ந்த அமெரிக்கா-வை சேர்ந்த பர்ஸ்ட் சோலார் நிறுவனம் தமிழ்நாட்டில் மாபெரும் முதலீட்டில் மிகப்பெரிய சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.

 பர்ஸ்ட் சோலார் நிறுவனம்

பர்ஸ்ட் சோலார் நிறுவனம்

இந்தத் திட்டத்திற்காகப் பர்ஸ்ட் சோலார் சுமார் 4185 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்யத் திட்டமிட்டு இருந்து நிலையில், தற்போது இந்நிறுவனத்தின் தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூர் அருகில் பிள்ளைப்பாக்கம் பகுதியில் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.

சோலார் மாடியூல்
 

சோலார் மாடியூல்

பர்ஸ்ட் சோலார் நிறுவனம் தின் பிளிம் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தின் பிளிம் போட்டோவோல்டாயிக் சோலார் மாடியூல்களைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் பிள்ளைப்பாக்கம் தொழிற்சாலையில் சுமார் 3.3 ஜிகாவாட் போட்டோவோல்டாயிக் சோலார் மாடியூல்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ளது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

இதன் மூலம் போட்டோவோல்டாயிக் சோலார் மாடியூல்களுக்கு வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு மட்டுமே நம்பியிருக்கும் நிலை மாறுவது மட்டும் அல்லாமல் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகும்.

4185 கோடி ரூபாய் முதலீடு

4185 கோடி ரூபாய் முதலீடு

ப்ர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் 4185 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் சுமார் 1076 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சோலார் மின்சார உற்பத்தியில் ப்ர்ஸ்ட் சோலார் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும்.

முதல்வர்கள்

முதல்வர்கள்

இந்த முதலீட்டையும், நிறுவனத்தையும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பெறப்பட்டாலும், ஸ்டாலின் அரசு ஆட்சியைப் பிடித்த உடன் ஏற்கனவே அரசு செய்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் நிறுவப்பட அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது மூலம் அதிகத் தொழிற்சாலைக்கான நிலம் ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

First Solar’s 3.3 GW PV solar module massive manufacturing facility at Pillaipakkam Sipcot

First Solar’s 3.3 GW PV solar modudle massive manufacturing facility at Pillaipakkam Sipcot பர்ஸ்ட் சோலார்-ன் பிரம்மாண்ட தொழிற்சாலை.. ஸ்ரீபெரும்புதூர்-ன் புதிய அடையாளம்..!

Story first published: Thursday, June 2, 2022, 10:58 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.