வெளிநாட்டில் லொறி ஓட்டி சென்ற தமிழர்! உள்ளே திறந்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… புகைப்படங்கள்


மலேசியாவை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு இராச மலைப்பாம்புகளை கடத்திய குற்றத்திற்காக பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புலேந்திரன் பழனியப்பன் (51) என்ற இந்திய வம்சாவளி தமிழர் அனுமதியின்றி பாம்புகளை இறக்குமதி செய்த குற்றத்திற்காக 3,600 டொலர்களுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் வசிக்கும் டிரக் ஓட்டுனரான பழனியப்பன் சிங்கப்பூருக்கு பாம்புகளை கடத்தியிருக்கிறார்.
மலைப்பாம்புகள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்படவில்லை என்பது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான தண்டனைகளும் பரீசீலக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் லொறி ஓட்டி சென்ற தமிழர்! உள்ளே திறந்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... புகைப்படங்கள்

immigration and checkpoint authority

உலகின் மிக நீளமான பாம்பான இராச மலைப்பாம்புகள் (reticulated pythons) தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டவை.
பல நாடுகளில், அதன் தோலுக்காகவும், பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தவும், செல்லப்பிராணிகளாக விற்பனை செய்யவும் கொல்லப்படுகிறது.

பழனியப்பன் ஓட்டிச் சென்ற மலேசியப் பதிவு செய்யப்பட்ட கண்டெய்னர் லொறியை சோதனை செய்த குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் ஏப்ரல் 7ஆம் திகதி பாம்புகளை கைப்பற்றினர்.

இரண்டு மலைப்பாம்புகளும் கடுமையான, நாள்பட்ட மற்றும் மீளமுடியாத சுகாதார நிலைமைகளைக் கொண்டிருப்பதை கண்டு பொலிசார் அதிர்ந்தனர், இதனையடுத்து வேறுவழியின்றி அவை கருணைக்கொலை செய்யப்பட்டன.

வெளிநாட்டில் லொறி ஓட்டி சென்ற தமிழர்! உள்ளே திறந்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... புகைப்படங்கள்

immigration and checkpoint authority

ஓட்டுனர் இருக்கைக்கு மேலே உள்ள மேல்நிலைப் பெட்டியில் துணி மூட்டைகளில் பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
விசாரணையில், சிங்கப்பூரில் உள்ள அறியப்படாத பெறுநருக்கு பாம்புகளை கொடுத்து உதவ பழனியப்பன் ஒப்புக்கொண்டது தெரியவந்தது.

அந்த வேலைக்காக அவருக்கு மலேசிய ரிங்கிட் 300 (தோராயமாக 68 அமெரிக்க டொலர்கள்) கொடுக்கப்பட இருந்தது.
பழனியப்பனுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது கடத்தப்பட்ட ஒவ்வொரு பாம்பிற்கும் சிங்கப்பூர் பண மதிப்பில் $50,000 வரை அபராதம் கூட விதிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் லொறி ஓட்டி சென்ற தமிழர்! உள்ளே திறந்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... புகைப்படங்கள்

immigration and checkpoint authority



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.