பாம்பனில் கலர் மீன்கள் வரத்து அதிகரித்தும் விலை குறைவாக விற்பனை ஆவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதனால் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் தங்களுடைய படகுகளை கரை சேர்த்து பழுது பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக கடல் சீற்றம் போன்ற காரணங்களால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் இருந்த நிலையில், நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்று வந்தனர். இதையடுத்து நாட்டுப்படகு மீனவர்களுக்கு கலர் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கலர் மீன்கள் வரத்து அதிகமாக இருந்தும் தற்போது கிலோ 30 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கிச் செல்வதால் போதிய விலை கிடைக்காமல் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM