அகமதாபாத்:
காங்கிரஸ் கட்சியில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகினார். இந்த நிலையில் அவர் இன்று பா.ஜனதா கட்சியில் இணைந்தார். குஜராத் மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் அவர் அந்த கட்சியில் சேர்ந்தார்.
முன்னதாக ஹர்திக் படேல் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க போகிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்காக உழைப்பேன். ஒரு சிறிய சிப்பாயாக பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்…காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா உறுதி