நாட்டின் சில பகுதிகளை மட்டும் விட்டு கொடுப்பது சுதந்திரத்தை விட்டு கொடுப்பது போன்றது என்று உக்ரைன் ஜனாதிபதி மனைவியும் நாட்டின் முதல் பெண்ணுமான ஒலினா கூறியுள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 100 நாட்களை கடந்துள்ள நிலையிலேயே இப்படி பேசியுள்ளார் ஒலினா.
மேலும் அவர் கூறுகையில், நாங்கள் சில சமயங்களில் நாடுகளின் தலைவர்களிடமிருந்து சில சந்தர்ப்பங்களில் பெரிய மற்றும் செல்வாக்கு மிக்க நாடுகளின் தலைவர்களிடமிருந்து கேட்கும் அனைத்து அறிக்கைகளையும் உக்ரேனியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
உங்கள் நாட்டின் சில பகுதிகளை மட்டும் விட்டு கொடுக்க முடியாது, இது ஒரு சுதந்திரத்தை விட்டு கொடுப்பது போன்றது.
எங்கள் நாட்டின் பகுதிகளை நாங்கள் கொடுத்தாலும் ஆக்கிரமிப்பாளர் போரை நிறுத்த மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து அழுத்துவார்கள்.
தொடர்ந்து எங்கள் நாட்டிற்கு எதிராக மேலும் மேலும் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவார்கள் என கூறியுள்ளார்.