ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
இருப்பினும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஆதார்-பான் எண்ணை இணைக்க கட்டணம் கட்ட வேண்டும்
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இவ்வாண்டு மார்ச் 29 அன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான ஆதார் கார்டு.. எப்படி விண்ணப்பிப்பது.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ..!
ஆதார் – பான் இணைப்பு
2022ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று அல்லது அதற்கு முன் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்தால், உங்களிடமிருந்து ரூ. 500 வசூலிக்கப்படும். ஜூலை 1 அல்லது அதற்குப் பிறகு பான்-ஆதார் இணைத்தால் இரு மடங்கு அதாவது ரூ. 1,000 கட்டணம் செலுத்த வேண்டும்.
வரி செலுத்துவோர்
மேலும் வரி செலுத்துவோர் சிரமத்தைத் தணிக்கும் வகையில் இந்த ஆண்டு மார்ச் 29 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, வரி செலுத்துவோர் தங்கள் ஆதார் பான் எண்களை இணைக்க 2023ம் ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், வரி செலுத்துவோர் இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் மூன்று மாதங்கள் வரை ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அதற்குப் பிறகு ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
மேலும் அடுத்த ஆண்டு அதாவது 2023, மார்ச் 31 வரை, தங்கள் ஆதாரை தெரிவிக்காத மதிப்பீட்டாளர்களின் பான், வருமானம் திரும்பப் பெறுதல், பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற சட்டத்தின் கீழ் உள்ள நடவடிக்கைகளுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை ஆதார் – பான் எண்களை இணைக்காதவர்கள் உடனடியாக ரூ.500 செலுத்தி இணைத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. இனி ஆதார் – பான் எண்களை இணைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
எஸ்.எம்.எஸ் மூலம் இணைப்பது எப்படி?
உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் 10 இலக்க பான் எண் ஆகியவற்றை மொபைலில் டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாகவும் இணைக்கலாம். ஆதார் – பான் இணைக்கப்பட்டவுடன் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் உறுதி செய்யப்படும்.
ஆன்லைனில் இணைப்பது எப்படி?
Income Tax e-filing இணையத்திற்கு சென்று அங்கு ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும். அதன்பின் ஓடிபி வெரிஃபிகேஷன் நிறைவடைந்த பின்னர் பான் கார்டு விவரங்களை கொடுத்து பாஸ்வேர்டு உருவாக்கி மீண்டும் லாகின் செய்ய வேண்டும். ஒருவேளை ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்திருந்தால், லாகின் என்பதை கிளிக் செய்யவும். வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆதார் எண்ணை இணைப்பதற்கான லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை டைப் செய்யவும். டிராப் டவுன் மெனு-வில் இருந்து ஆதார் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இப்போது உங்களின் இரண்டு ஆவணங்களும் இணைக்கப்பட்டுவிடும். இணைக்கப்பட்டது உறுதி செய்ய மெசேஜ் அனுப்பப்படும்.
What if you don’t link PAN with Aadhaar by June-end
What if you don’t link PAN with Aadhaar by June-end | இனி ஆதார்-பான் எண்களை இணைக்க கட்டணம்: எவ்வளவு தெரியுமா?