பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாப்பாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் ஜானி டெப். இவர், அமெரிக்க நடிகையான ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜானி டெபின் பெயரை குறிப்பிடாமல் ஆம்பர் ஹேர்ட் தான் பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அவரின் இந்த கட்டுரையால், ஜானி டெபின் பெயர் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு இடங்களில் பாதிப்புக்கு உள்ளானது. இந்நிலையில், தன் மீது பொய்யான புகார் கூறி ஆம்பர் ஹேர்ட் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார் எனவும், இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று ஜானி டெப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம்பர் ஹேர்ட், மலையளவு ஆதாரம் இருந்தபோதும் அதிகாரம், ஆதிக்கத்தை கொண்ட எனது முன்னாள் கணவருக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை என, கூறியுள்ளார். மேலும் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த பெண்களுக்கும் பின்னடைவு எனவும் அவர் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR