பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாகநேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலை ரூபா 5 ஆல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது
இறக்குமதி வரி, பெறுமதி சேர் வரி (VAT)மற்றும் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான சுங்க வரிகளை அதிகரிப்பதற்கான உத்தரவுகளை நிதி அமைச்சகம் நேற்று (1) அறிவித்திருந்தது.
இதேவேளை பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.