சவ ஊர்வலத்தில் நடனமாடி சென்ற கால்பந்து வீரர் குத்திக்கொலை

திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், ஜங்கம்படி, குருநானக் காலணியை சேர்ந்தவர் ஆகாஷ் (23). கால்பந்து வீரரான இவர் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த நிலையில் விஜயவாடாவை சேர்ந்த பர் டோனி. பிரபல ரவுடியான இவர் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்று மாலை அவரது சவ ஊர்வலம் நடந்தது. சவ ஊர்வலத்தில் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொண்டு நடனமாடியபடி சென்றனர். அப்போது ஆகாஷ் கோஷ்டிக்கும், டோனி கோஷ்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
டோனியின் நெருங்கிய நண்பரான பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் நேற்று முன்தினம் மாலை ஆகாஷை வீட்டிற்கு சென்றனர் வீட்டிலிருந்த ஆகாஷ் மடக்கி சரமாரியாக கத்தியால் குத்தினார். மொத்தம் 18 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து விஜயவாடா மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.