10, 11, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி இதுதான்: தாராளமாக மதிப்பெண் வழங்க அறிவுரை

School public exam results dates, Dept advice to correct answer sheet liberally: பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள்களை திருத்துவதில் கடுமை காட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஆம் தேதியுடன் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வுகளில் மாணவர்களுக்கு தாராளமாக மதிப்பெண்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இதில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதே போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேநேரம் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைகிறது. அதேநேரம் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது.

இதையும் படியுங்கள்: NEET UG 2022: இலவச மாக் டெஸ்ட்; முந்தைய ஆண்டு வினாத் தாள் பெறுவது எப்படி?

இந்த நிலையில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்ட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாராளமாக மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.