TIK-TOK ReEntry: இந்திய சந்தைக்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் முயற்சியில் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வீடியோ பகிர்வு தளமான டிக்டாக் செயலிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்திய சந்தைக்குள் என்ட்ரி கொடுத்திட, புதிய கூட்டாளர்களை பைட் டான்ஸ் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டில் டிக்டோக் உட்பட 59 செயலிகள் சீனாவுடன் பயனர் தரவைப் பகிர்ந்ததாகக் கூறி இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இது, பைட்டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேற வழிவகுத்தது.
ஹிரானந்தானி குழுமம்
தற்போது பைட்டான்ஸ் இந்தியாவில் உள்ள ஹிரானந்தானி (Hiranandani) குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிரானந்தனி குழு Yotta Infrastructure Solutions இன் கீழ் தரவு மைய செயல்பாடுகளையும் நடத்து வருகிறது.
மூத்த அரசாங்க அதிகாரி கூறியதாவது, பேச்சுவார்த்தை இன்னும் முறையான கட்டத்தை எட்டவில்லை. இதுபோன்ற பிசினஸ் திட்டங்களை மத்திய அரசு அறிந்திருக்கிறது. தேவையான ஒப்புதல்களுக்கு வணிக மாதிரியை ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
இந்திய சந்தையில் பைட் டான்ஸ் மீண்டும் நுழைவதற்கு பாட்னர்ஷிப் மாடல் சிறந்த வழியாகும். இது உள்ளூர் விதிமுறைகளுக்கு இணங்க நிறுவனத்தை அனுமதிக்கிறது. அனைத்து பயனர் தரவையும் உள்நாட்டு சந்தையில் ஹோஸ்ட் செய்ய வேண்டும் என்பதை குறிக்கிறது.
புதிய பெயரில் டிக்டாக்
Krafton நிறுவனம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட PUBG மொபைல் கேம்மை, வேறு பெயர் மற்றும் கொள்கைகளுடன் இந்தியா மீண்டும் ரின்ட்ர் கொடுத்த உத்தியை பைட்டான்ஸூம் பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை டிக்டாக் செயலி மீண்டும் இந்தியாவிற்குள் வரும் பட்சத்தில், டிக்காட் பதிலாக வேறு பெயரை அந்நிறுவனம் சூட்ட வேண்டும்.
பைட்டான்ஸின் ரிஎன்ட்ரி சந்தையில் மீண்டும் உத்வேக்ததை அதிகரித்துள்ளது. டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதித்த சமயத்தில், சிங்காரி, எம்எக்ஸ் டக்கா டக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற உள்ளூர் தளங்கள் அபார வளர்ச்சியை பெற்றது குறிப்பிடத்தக்கது.