புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில், பாக்கெட்டும் இல்லை. பர்சும் இல்லை என அக்கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை பங்கு பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கில்ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் ஆகியோருக்கு, அமலாக்கத்துறை மீண்டும் ‘சம்மன்’ அனுப்பியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை: பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணப்பரிமாற்றம் செய்தார்கள் என்று குற்றச்சாட்டு.தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்?. பாக்கெட்டும் இல்லை, பர்சும் இல்லை. ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? இவ்வாறு அந்த அறிக்கையில் சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில், பாக்கெட்டும் இல்லை. பர்சும் இல்லை என அக்கட்சி மூத்த தலைவரும், முன்னாள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.