தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களும், நண்பர்களுமான ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அண்மையில் ரஜினியின் போயஸ் இல்லத்தில் சந்தித்துக் கொண்டது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் நாளை (ஜூன் 3) திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
Thank you @ikamalhaasan Sir! @rajinikanth Sir! What a friendship! inspiring Love you Sir’s❤️❤️❤️ pic.twitter.com/l61EuttG89
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 29, 2022
இது குறித்து படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜும் கமல் ரஜினியின் நட்புறவு குறித்து ட்விட்டரில் நெகிழ்ச்சி ததும்பு பதிவிட்டு அவர் ரஜினியை சந்தித்தது மற்றும் ரஜினி, கமல் சந்திப்பு போட்டோக்களையும் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து லோகேஷின் பதிவும், ரஜினி கமல் சந்தித்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகின.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை அவரது இல்லத்தை வைத்து கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் அஜித் குமார் சந்தித்ததாகவும், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்பட எனக் குறிப்பிட்டு பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் வழக்கமான எளிமையான தோற்றத்தில் ரஜினியும், தனது 61வது படத்துக்கான கெட்டப்பில் அஜித்தும் இருந்துள்ளனர். இதனைக் கண்ட இருவரது ரசிகர்களும் பரவசம் அடைந்து அதிசயித்து போயிருக்கிறார்கள்.
ஆனால் அந்த புகைப்படம் முற்றிலும் போலியானது எனவும், ரஜினியும் அஜித்தும் சந்திக்கவில்லை, அஜித்துடன் ரசிகர் ஒருவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரஜினியும் அஜித்தும் இருப்பது போன்று எடிட் பரப்பியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இருப்பினும் இந்த Fake Edit உண்மையாகிவிடக் கூடாதா என்றும் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், தரமான Fan Made என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே அஜித்தின் செய்தி தொடர்பாளர், மேலாளருமான சுரேஷ் சந்திராவும் ட்விட்டரில் பரவும் போட்டோ போலி எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: