வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஊழல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, ‘ ஏசிபி 14400’ என்ற மொபைல்போன் செயலி ஒன்றை அம்மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்த உடன், மொபைல்போனை உறுதி செய்ய, ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் அனுப்பப்படும். இதனை பதிவு செய்த உடன், செயலி திறந்த உடன் நேரடி புகார் மற்றும் புகாரை பதிவு செய்தல் என்ற இரு வாய்ப்புகள் வழங்கப்படும்.
‘நேரடி புகார்’ பிரிவில், லஞ்சம் கொடுப்பதை நேரடியாக புகைப்படமாக பதிவு செய்தல், ஆடியோ மற்றும் வீடியோ பதிவு செய்த முடியும் முடியும்.
புகாரை பதிவு செய்தல் பிரிவில், லஞ்சம் குறித்த புகாரை பதிவு செய்து அது குறித்து தங்களிடம் உள்ள வீடியோ மற்றும் ஆடியோவை பதிவு செய்து அனுப்ப முடியும்.
புகாரை அனுப்பிய உடன், அதற்கான பதிவு எண் அனுப்பப்படும். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் புகாரை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுப்பார்கள். இந்த செயலி தற்போது ஆண்டிராய்டு போன்களில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் ஐபோன்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement