இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக, புறக்கோட்டையைச் சேர்ந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் அப்பிள் பழம் ஒன்று 200 ரூபாவாகவும், ஆரஞ்சு பழம் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ திராட்சைப் பழம் 1500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
பெறுமதிசேர் வரி அதிகரிப்பு
பெறுமதிசேர் வரி அதிகரிப்பு மற்றும் புதிய வரித் திருத்தங்களால் இவ்வாறு விலைகள் உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
8 வீதத்தில் இருந்து 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தப் புதிய திருத்தத்தால், புறக்கோட்டையில் உள்ள கடைகளில் பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.