வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வதோதரா :குஜராத்தைச் சேர்ந்த, இளம் பெண், தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
குஜராத்தில், வதோதராவைச் சேர்ந்தவர், ஷாமா பிந்து ,24 தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவருக்கு, வரும், 11ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பத்திரிகைகளை அடித்து, உற்றார், உறவினர், நண்பர்களுக்கு வினியோகித்துள்ளார்.
அந்தப் பத்திரிகையை பார்த்த பலருக்கு ஆச்சரியம். காரணம், ஷாமா பிந்துதான் மணமகள்; அவரேதான் மணமகனும் கூட. ‘சோலோகமி’ எனப்படும் சுயதிருமணம் செய்கிறார் பிந்து.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: எனக்கு திருமணத்தில் ஆர்வமில்லை; அதே நேரத்தில் மணமகளாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் என்னையே நான் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன். அனைத்து சடங்குகள், பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றியே இந்தத் திருமணம் நடக்க உள்ளது. . குஜராத்தின் முதல் சுயதிருமணமாக இது இருக்கலாம்.
திருமணத்துக்குப் பின் எப்படி செயல்படவேண்டும் என்று எனக்கு சில நிபந்தனைகளையும் வகுத்துள்ளேன். திருமணத்துக்குப் பின் தேனிலவுக்கும் கோவா செல்ல உள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement