சென்னை: கடந்த ஓராண்டில் ரூ.409 கோடியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 189 பணிகள் நடைபெற்றுள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டிடத்தை பொதுமக்கள் பார்வைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.கஸ்டாலின் உரையாற்றினார்.