எதிர்கால தொழில்நுட்பங்கங்களுடன் இணைந்து ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இந்தியா, இஸ்ரேல் இடையே கையெழுத்தாகி இருக்கிறது.
டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்ஜமின் கன்ட்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது இதற்கான தொலைநோக்கு திட்டம் முடிவு செய்யப்பட்டது.
இந்தியா – இஸ்ரேல் இடையே ராஜாங்க உறவுகள் தொடங்கி 30 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன், இஸ்ரேல் பாதுகாப்பு ஆராய்ச்சி இயக்குநரகம் செய்துள்ள ஒப்பந்தம் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.