நாளை முகூர்த்த தேதி என்பதால் சென்னையில் இருந்து வெளியூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று, போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊருக்கு செல்வதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று அதிகளவில் பயணிகள் குவிந்ததால், பேருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டும், நாளை முகூர்த்த நாளை முன்னிட்டு, இன்று சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 300 விரைவு பேருந்துகள் உட்பட 2400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், தேவைப்பட்டால் மாநகர சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கூடுதல் சிறப்பு பேருந்துகள் விட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பேருந்துகள் உடனடி தேவை – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை.!#MNM #KamalHaasan #MKStalin #TNGovt #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunal pic.twitter.com/EKCVcrCKmO
— Seithi Punal (@seithipunal) June 2, 2022