இந்தியத் திலையுலகின் பலமொழி பாடகர்களில் ஒருவரான கேகே நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது இறப்பிற்கு இந்திய திரையுலமே இரங்கல் தெரிவித்தன.
இந்நிலையில், பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பன்முகப் பாடகர் கே.கே.யின் அகால மரணம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
வசீகரமான, புதுமையான, மகிழ்ச்சியான மற்றும் அனிமேஷன் கொண்ட ஒரு ஆத்மார்த்தமான குரலை வரமாகக் கொண்டு கே.கே, தனது பாடல்கள் மூலம் அனைத்து மொழிகளிலும் இதயங்களை வென்றுள்ளார்.
அவர் தனது கலை மூலம் வாழ்வார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்..
ஜூன் 10-ல் உள்கட்சி தேர்தல் தொடக்கம்: சோக கீதம் பாடும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்