உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனத்தின் செய்தி பகிரும் தளமான வாட்ஸ்அப், இந்தியாவில் கோடிக் கணக்கிலான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த சூழலில், விதிகளை மீறியதாக 16 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம் தடை செய்துள்ளது.
பிற செயலிகளுடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப் தான் அரட்டை, அழைப்பு என அன்றாட தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, விதிகளை மீறும் பயனர்களின் கணக்குகளையும் நிறுவனம் அவ்வப்போது முடக்கி வருகிறது.
வாட்ஸ்அப் தற்போது அதன் 11வது மாத அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் விதிமுறைகள் மற்றும் இந்திய சட்டத்தை மீறும் கணக்குகள் மீதான நிறுவனத்தின் நடவடிக்கையை இந்த அறிக்கை விவரிக்கிறது. இந்திய தொழில்நுட்ப விதி 2021-இன் கீழ், நிறுவனம் தனது ஏப்ரல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
WhatsApp இன் சமீபத்திய அறிக்கையின்படி, நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய கணக்குகளை தடை செய்துள்ளது. தளத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் பிற காரணங்களுக்காக இந்தக் கணக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரையிலான தகவல்கள் உள்ளன.
Netflix Account: ஒரே நேரத்தில் லட்ச கணக்கிலான சந்தாதாரர்களுக்கு குட்பை சொன்ன நெட்பிளிக்ஸ்!
வாட்ஸ்அப் விளக்கம்
இதுகுறித்து வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் சேவைகளை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதில் வாட்ஸ்அப் முன்னணியில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு, பிற மெய்நிகர் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக தரவு ஆய்வாளர்கள், நிபுணர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம். இந்த செயல்பாடுகளின் மூலமாக மட்டுமே தளத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று நம்புகிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
YouTube Videos: சாதனை பட்டியலில் இந்தியா – 11 லட்சத்திற்கும் அதிகமான யூடியூப் வீடியோக்கள் நீக்கம்!
இந்திய தொழில்நுட்ப விதிகளின்படி நடவடிக்கை
வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஏப்ரல் 2022 அறிக்கையை ஐடி விதி 2021 இன் கீழ் வெளியிட்டுள்ளது. பயனர் பாதுகாப்பு அறிக்கையானது, வாட்ஸ்அப் பயனர்களின் புகார்கள் மற்றும் நிறுவனம் எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை விவரிக்கிறது.
இந்த அறிக்கையில், WhatsApp ஏப்ரல் மாதத்தில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்வதற்கான முக்கிய காரணம் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காததுதான்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக சில கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. தளத்தில் போலியான செய்திகளைத் தடுக்க நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
Recharge Price Hike: தீபாவளி பரிசா இது! ரீசார்ஜ் செய்ய கூடுதல் பணம்!
தவறான செய்திகளை அதிகம் முறை பகிரும் கணக்குகளையும் வாட்ஸ்அப் கண்காணித்து தடை விதித்துள்ளது. வெளிப்புற இணைப்புகளையும், அனுப்பப்பட்ட செய்திகளின் லேபிள்களையும் நிறுவனம் அவ்வப்போது சரிபார்க்கிறது. அப்போதுதான் போலியான செய்திகளை தடுக்க முடியும் என்று நிறுவனம் நம்புகிறது.