மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி பகுதியில் உள்ள குசியா கிராமத்தில் கடும் வறட்சி காரணமாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆழமான கிணற்றில் இறங்கி பெண்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவதாக குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள 3 கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருப்பதாகவும், கை பம்புகளிலும் தண்ணீர் வருவதில்லை என்றும் தெரிவித்தனர்.