சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியுடன், முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த சந்திப்பின்போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 க்கும் மேற்பட்ட மசோதாக்கள் தற்போது நிலுவையில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நிலுவையிலுள்ள மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநில அரசு நியமிக்கும் என்ற சட்ட மசோதா உள்ளிட்ட நிலுவையில் உள்ளது.
சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் மசோதா உள்ளிட்ட 13 நிலுவையில் உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ஆளுனருடனான இந்த சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.
நாளை கலைஞர் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது குறித்தும், அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பாக முதல்வர்-ஆளுநர் இடையே பேச்சுவார்த்தை நடக்கலாம் என்ற இரு தகவலும் வெளியாகியுள்ளது.