சென்னை:
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை புறநகர் ரெயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தேர்வுகளுக்குச் செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.